Thursday, 16 February 2012


 என் அருமை தோழிகளே தோழர்களே. நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் இந்த வலைதொடர்பில் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். தொடர் பயணங்களாலும். சற்று வேலை பளுவினாலும். உங்களை சந்திக்க இந்த நிண்ட காலதாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். நன் இன்று உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தொஷம் கொள்கிறேன்.
   
   இன்று எனது படைப்பில் எனது நீண்ட நாள் ஆசையான short filmஉருவாக்கும் முயற்சி தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
 அமாம் எங்கள் அலுவலகத்தில் உள்ள சில நண்பர்கள் சேர்ந்து ஒருகுறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
 ஒருவகையில் இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும். என் மனம் நிறைவு பெறவில்லை. என் மனதில் தோன்றியபடி என்னால் திரையில் அதனை சரியாகவும் முறையாகவும் அழகாகவும் காட்சிபடுத்த தவறிவிட்டேன்.  சரியான திட்டமிடல். போதிய கல அவகாசமின்மை. சக technician குள் புரிந்துணர்வு இல்லாமை, சிறு பதற்றம். மற்றும் சில காரணங்களால் என்னால் அதனை சிறப்பாக செய்ய முடியவில்லை. இதை ஒரு அனுபவமாக எடுத்துகொண்டு  எனது
அடுத்த குறும்பட படைப்பை சிறப்பாக தர முயற்சி செய்கிறேன்,  இருந்தும் எனது லட்சிய பயணத்தின் பாதையில் எனது காலடி தடங்களை பதியவைதுள்ளேன் என்னும் சிறு மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  நான் என்று பாராமல், ஒரு அறிமுகமற்ற மனிதனின் படைப்பு என்று எண்ணி இதை நீங்கள் பார்த்தல். ஒரு சில நிமிடங்கள் உங்கள் மனிதில் இப்படம் வந்து போகலாம்.

http://www.youtube.com/watch?v=i5EUErO3Pz0

இந்த லிங்கை கிளிக் செய்து குறும்படத்தை காண்க

இப்படிக்கு உங்கள் 
ஆருயிர் நண்பன்


வேலு எழிலரசன்