என் அருமை தோழர்களே தோழிகளே, உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள், இன்று என் வலை தளத்தில், என் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கிறேன்,
இக் கதையை, உங்கள் மனம் அமைதியாக இருக்கும், சூழலிலோ, அல்லது, எல்லா வேலைகளும் முடிந்து இரவு நேரத்தில் , தூங்கும் முன்போ, இக் கதையை படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனேன்றால் , உங்களை உங்கள் இளமை காலத்திற்கு, நீங்கள் பிறந்த ஊருக்கு, உங்கள் 16 வயதிற்கு , நான் உங்களைஅழைத்து
செல்ல விரும்புகிறேன்
செல்ல விரும்புகிறேன்
ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல், விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல், பூவுக்கும் வண்டுக்கும் காதல், என அணைத்து நிலைகளிலும் பரவி இருக்கும் இந்த காதலை நாம் அனைவரும் கடந்து வந்திருப்போம் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ இயலாத ஒன்று, அதிலும் முதன் முதலில் பூத்த அந்த முதல் காதல் ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கும், அப்படி ஒரு காதலை தான் இருதலை ராகம் என்ற தலைப்பில் எழுதுகிறேன், ,
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில், ஸ்ரீ நடராஜ பெருமாள் அவதரித்த சிதம்பரதிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குக் கிராமம் தான் நான் பிறந்த ஊர், இயற்கையின் செழிப்பால் எனது கிராமம் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும், நெற்பயிர், கரும்பு, நிலகடலை இவகைளெல்லாம் எனது கிராமத்தின் விளைநிலங்கலாகும், எனவேதான் இவ்வுலகத்தில் பிடித்த இடமாக எனது ஊரை என் மனம் முன்மொழிய துடிக்கும், நானும் சிறுவயதில் எல்லோரையும்போல ஊர் சுற்றிக்கொண்டு, கிரிக்கெட் விளையாடிக்கொண்டும் அவ்வபோது பள்ளிக்கும் சென்றுகொண்டு ,எனது இளமை காலங்களை கழித்துகொண்டிருந்தேன், அதுவரை நண்பர்களும், கிரிக்கெட்டும் மட்டுமே உலகமாக தெரிந்த எனக்கு, வேறொரு புது உலகத்தை உணர ஆரம்பித்தேன், அந்த மாய உலகம்தான் காதல்,
எனக்கோ வயது பதினாறை தாண்டி பயணித்தது, அவளுக்கோ பதினாலை
தொட
துடித்தது, இருந்தும் இருவருக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, அப்பொழுதுதான் என் முகத்தில் அரும்பு மீசை துளிர்விட்டது, அனால் எப்பொழுது எப்படி அந்த காதல் வந்தது என்று இதுனால் வரை என்னால் கனிக்கமுடியவில்லை, இதில் என்ன வேடிக்கை என்றால், சிறுவயதிலிருந்தே எனக்கு அவள்மேல் கோபமும், என் மேல் அவளுக்கு வெறுப்பும் தொடர்ந்து கொண்டிருந்தது, ஏனென்றால் நானோ ஏழை அவளோ கொஞ்சம் வசதியானவள் வெள்ளைத்தோல் நிறம் கொண்டவள், கொஞ்சம் திமிரும், அடிகடி கோபம் கொள்ளும் சுபாவம் உடையவள் , இந்தமாதிரி குனம் உடைய பெண்களை எனக்கு அறவே பிடிக்காது, அதுமட்டும்மில்லாமல் சுமார் நூறு வீடுகள் உள்ள எங்கள் தெருவில் அப்பொழுது பத்து வீட்டில் மட்டுமே டிவி இருந்தது , இதில் இரண்டு வீட்டில் மட்டுமே நான் டிவி பார்க்க செல்லுவேன், ஒன்று எங்கள் ஊரிலேயே முதல் முதலில் கலர் டிவி வாங்கிய இன்ஜினியர் பெறுப்பா வீடு, மற்றொன்று என் காதலியின், வீடு அவள் வீட்டில் ப்ளோக்கன் ஒயிட் வீடியோகான் டிவி மற்றவர்கள் வீட்டுக்கு நான் போவது கிடையாது, இன்ஜினியர் பெறுப்பா வீட்டில் டிவி பார்பதென்பது சற்று கடினமானது , அங்கு டிவி பார்க்க போனால் அந்த பெறுமாவை சமாளிக்க முடியாது, டேய் கடைக்கு போய் கடலை எண்ணெய் வாங்கிவா துவரம் பருப்பு வாங்கிவா, மரத்தில் ஏறி முருங்கைக்காய் பரி, கீரை ஒடிச்சு குடு வயலுக்கு போய் பெறுப்பாவிர்க்கு சாப்பாடு கொண்டுபோய் குடு என்று எதாவது ஒரு வேலையை கையில் வைதுகொண்டே இருப்பார்கள், நான், நான் மட்டுமில்லாமல் எனது வயதில் உள்ள ஆண் பெண் என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் "சக்திமான்" சனிகிழமை பதினோரு மணிக்கல்லாம் இந்த இரண்டு வீட்டில் எதாவது ஒரு வீட்டில்தான் இருப்பேன் பெரும்ம்பாலும் பெருபா வீடிற்கு செல்வதை தவிர்ப்பேன், அங்கு சென்றால் கண்டிப்பாக முழுமையாக நாடகம் பார்க்க முடியாது, அதனால் இங்கு தான் பல நேரங்கள் டிவி பார்பேன், அங்கு அந்த பிரச்னை என்றால் இங்கு இவள் தொல்லை அதிகம், அந்த காலகட்டங்களில் சன்,ஜெயா,ராஜ்,விஜய், பொதிகை என மொத்தம் ஐந்தே சேனல்கள்தான், நாடகத்தின் இடையில் விளம்பரம் ஓடும் பொழுது அவள் ஓயாமல் ரிமோட்டில் சேனலை மாற்றி கொண்டிருப்பாள், இதனால் விளம்பரம் முடிந்து நாடகம் ஓடிகொண்டிருக்கும், பொதுவாக நான் படங்கள விரும்பி பார்க்கும் பொழுது யாரேனும் தடங்கல் செய்தால் எனக்கு கடும் கோபம் வரும், சக்திமான் என்றல் சொல்லவா வேணும், இருந்தும் என்ன செய்ய, எனது வீடாக இருந்தால் டிவி பெரிச்சம்பழகரரிடம்தான் இருக்கும், இது அவள் வீடாச்சே, அதனால் எனது கோவத்தை கட்டுபடுதிகொண்டு அவள்மேல் வெறுப்புடன் டிவி பார்பேன், இதனாலேயே எனக்கு அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது, அவளுக்கும் என்னை போல் எதாவது கோபம் இருந்திருக்கலாம், இதனால் சிறுவயதில் நாங்கள் சண்டையிட்டு கொண்டதே அதிகம், அப்படிப்பட்ட ஒரு பெண்ணின்மேல் எனக்கு காதல் பூத்ததை என்னால் இன்றும் நம்ப முடியவில்லை,
நான் அப்பொழுது டிப்ளமோ எலக்ட்டிரிக்கள் படித்துகொண்டிருந்தேன், அவள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தால், லவ் மூட் ஸ்டார்ட் ஆனதிலேருந்து நான் தினமும் காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி குளிச்சிட்டு, புத்தகத்த எடுத்து படிப்பது போல உட்காந்திடுவன், இல்லனா எங்க அம்மா என்ன சந்தேக படுவாங்க, இந்த நேரத்தில இவன் எதுக்கு குளிச்சிட்டு, அப்படி எங்க போறான், முன்னல்லாம் எட்டு மணிக்கு எழுந்து சாப்டிட்டு அப்படியே படிக்க போயிடுவன் இப்ப எங்க போறான்னு பொலம்ப ஆரமிச்சிடுவாங்க, அதனாலேயே நான் படிகிரா மாதிரி கொஞ்சம் நேரம் ஆக்ட் பண்ணிக்கிட்டு, அப்படியே அவளை நேனைச்சிடிருபன் இந்நேரம் அவ எழுந்திருபாலா, இல்ல தூங்குவாளா, கோலம்போட வருவாளான்னு ஏன் மனசு தவியா தவிக்கும்,
மணி அஞ்சரை ஆச்சினா, நான் தலைல எண்ணெய் தடவி, முகத்தில பவுடர் பூசி, நெத்தியில செந்தூரம் விட்டுகிட்டு, அப்படியே டிப் டாபா, ராமராஜன் மாதிரியே வெட்கத்தோட வீதியில நடந்து வருவன், கொஞ்சம் பஸ்டாப் பக்கமா போயி, அவ கோலம் போட வருவாளான்னு வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருப்பன், யாருக்கும் சந்தேகம் வரகுடாதுன்னு, அதிகாலையே ஒரு குருப் அறுவடைக்கு போக பஸ்சுக்காக காத்துகிட்டிருக்கும், அதுல நம்ம வயசுதிட்டம் ஒரு ஆளை புடிச்சி பேசிகிட்டே, அப்படியே அவ வீட்ட லுக் விடுவன், அவ வருவாளா வரமாடாலானு என் மனசு பைத்தியம் புடிக்கும், நான் அவல நேனைச்சிகிட்டிருக்கும்போதே, அவ குளிச்சி தலைகூட துவட்டாம, வெள்ளை துண்டால ஈர தலைமுடிய கொண்டையிட்டிருப்பால், கைல கோலமாவு கிண்ணத்தோட வந்து நின்னு ஒரு பார்வ பார்பாபரு ஐயோ அப்படியே செத்து போயிடலாமுன்னு தோணும், இதுக்காகத்தான் நாம பொறந்தொமடானு தோனும் இந்த ஒரு பார்வைக்காக நான் விடிய விடிய கூட காதுக்கிடிருக்க்கலாமுனு தோணும், நான் அவளையே ரசிச்சி பார்பன்அவ கிழ பார்ப்பா, அவ திரும்பி என்ன பார்ப்பா, நான் மேல பார்ப்பன், அது பயமா, இல்ல வெட்கமானு எனக்கு தெரியல, அவல நேருக்கு நேர் பார்க்கும் தையிரியம் எனக்கு இல்ல, எங்க போயிடுவாலோனு என் மனசு பதறும் கோளம் போட்டிட்டு எழுந்து மறுபடியும் ஒரு லுக் விடுவா, சில நேரத்தில என் மனச கட்டுபடுத்தி அந்த லுக்க பார்க்க ட்ரை பண்ணுவன் அப்படி பர்த்துடனா அன்னைக்கு புல்லா ஆயிரம் தடவை அதை நெனைச்சு பார்ப்பன்,அவளும் கோளம் போட்டிட்டு உள்ளார போயிடுவா, ஆனா நான் அங்கதான் இருப்பன், அப்பப்ப நான் அங்க இருக்கிரானான்னு பஸ் வருதானு பர்கிரமாதிரி வந்து பார்த்திட்டு போவா , ஏன்னா அவ டென்த் கிளாஸ்ன்றதால கலையிலே டியூஷன் போய்ட்டு அப்படியே ஸ்கூல்லுக்கு போறதுக்காக உடனே ரெடியாகி யுனிபார்ம் மாட்டிகிட்டு, ஸ்கூல் பேக் எடுத்துகிட்டு பஸ் ஸ்டான்ட்டுக்கு வந்துடுவா, திடிர்னு பார்த்து சிரிப்பா, அப்போ அவளது முகம் காலையில பூத்த பூ மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கும் , எனக்கோ எங்கடா பஸ் வந்திட போகுதுன்னு வருத்தமா இருக்கும் அவளுக்கோ ஏதோ ஒரு பரிதவிபோட இருப்பா, பஸ் வந்ததும், எனக்கு பதட்டமாகிடும் அவளுக்கும்தான், அப்போ நேரா ஒரு பரவ பார்த்து, சயந்திரம் என்ன பார்க்க வருவியாடானு சொல்லாம சொல்லிட்டு போவா, நானும் அதவிட என்ன வேலை எனக்குன்னு சொல்லாம சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவன், அங்க போனா எங்க அம்மா, பெறிய சீம தொரை மாதிரி கலையிலே எங்க கெளம்பி போயிட்டுவர, எடுத்து வச்ச புசுதகம் அப்படியே கடக்கு, ஒன் மனசுல என்ன நெனைச்சிக்கிட்டுருக்கன்னு கொஞ்சம் சவுண்ட் விடுவாங்க, நான் உன் மறுமகளதான்மா நெனைச்சிக்கிட்டுருக்கன்னு மனசுக்குள்ள சத்தமா சொல்லிட்டு போய், போர்வைய போத்திக்கிட்டு அவள நெனைச்சி படுத்திடுவன், அப்புறம் ஒன்பது மணிக்கு எழுந்து வீட்டுல இருக்குற பழைய சாதத்த சாப்டிட்டு காலேஜிக்கு போயிடுவன்,
எனது அடுத்த வலை தளத்தில் இக் கதையின் மீதி பாகத்தை, எழுதுகிறேன். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது,
உங்கள் ஆருயிர் நண்பன்
வேலு எழிலரசன்






