Hi Friends To Day Iam Watching Raja Rani Frist Show, My Vimarsanam
ராஜா ராணி : திரைவிமர்சனம்
கதை :
வெவ்வேறு இரண்டு காதல் கைகூடாமல் பிரிகிறது, இதில் பிரிந்த ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோர்களின் சந்தோசத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள்,{ ஆர்யா நயன்தாரா } வழக்கமான தம்பதிகளாக வாழாமல் ஒரே வீட்டில் விரோதிகள் போல் வாழ்கிறார்கள், ஒரு நாள் அவள் இவ்வாறு வாழ்வதற்கான காரணத்தை அவனிடம் சொல்லுகிறாள் { அவளின் முந்தைய காதல் திரை வடிவமாகிறது }
airvaice mobile கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு innacent வெகுளித்தனமான பையன் மேல் கல்லூரியில் படிக்கும் nayagikku காதல் வருகிறது, ஜெய் நயன்தார { காதல் வருவதற்கான காரணங்களை நகைச்சுவையுடன் காட்சி படுத்திருப்பது சிறப்பு } சிலநாட்களில் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து கொள்கிறார்கள், பொழுது விடிகிறது மணப்பெண் ஆவலுடன் பதிவு திருமணம் அலுவலகத்திற்கு வந்து இரவுவரை காத்திருக்கிறாள், நாயகன் வரவில்லை, அதற்கான காரணத்தை தந்தையுடன் சேர்ந்து தேடும்போது நாயகன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நாயகனின் தந்தை சொல்ல நாயகியும் அவளின் தந்தையும் அதிர்ச்சியடைகிறார்கள் சில நாட்களுக்கு பிறகு ஜெய் ஆஸ்திரேலியாவில் இறந்துவிட்டதாக அவனின் நண்பன்மூலமாக நாயகிக்கு தெரியவருகிறது, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள், அந்த நேரத்தில் தன தந்தையின் விருபதிர்காக ஆர்யாவை திருமணம் செய்து கொள்கிறாள், இவளின் முந்தைய
கதல் கதையை கேட்டதும் ஒரு ஆணை இவ்வளவு ஆழமாக ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதை உணர்த்தும், தன தவறுகளை திருத்திக்கொண்டு ஒரு நல்ல கணவனாக மாறி வாழ முயலும் நேரத்தில் நயன்தார அவனை பழைய மனிதனாகவே பார்த்து அவனை மீண்டும் வெறுக்கிறாள், இதனால் மனமுடைந்து போகும் ஆர்யாவிற்கு அவன் நண்பன் சந்தானத்தின் மூலமாக ஆர்யாவின் முந்தைய காதல் நயன்தாராவிற்கு தெரியவருகிறது { அவனின் முந்தைய காதல் திரை வடிவமாகிறது ஆரியா நசிரியா } நண்பனுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வாலிபனாக வரும் ஆர்யாவின் கண்ணில் கல கலப்பாக வாழும் சுட்டிப்பெண் நசிரியா தென்படுகிறாள், அவளை பார்த்ததும் அவள்மேல் காதல் வயபடுகிறான் ஆரியா, ஆரியாவை தனக்கு பிடித்திருந்தாலும் சற்று அலைகழிக்கவிட்டு தன் காதலை அவனிடம் வெளிபடுதுகிறாள், நசிரியா ஒரு அனாதை என்பதை தெரிந்து கொண்ட ஆரியா அவளை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்கிறான், திருமணம் ஆனாலும் சிலகாலம் இவ்விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டுமென இருவரும் முடிவுசெய்துகொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள் அந்நேரத்தில் எதிர் பாராத விதமாக நசிரியா ஆர்யாவின் கண் முன்னே காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள் இந்த துன்பத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஆரியா தன் பெற்றோர்களின் விருபதிர்காக நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறான், ஆர்யாவின் காதல் கதையை கேட்ட நயன்தாரவிருக்கு ஆரியாவின்மேல் காதல் பிறக்கிறது, தான் திருந்தினாலும் தன்னை ஏற்க மறுபதால் மீண்டும் பழைய மாதிரியே பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான், இருந்தாலும் தன் மனைவியின்மேல் உள்ள காதலால் ஒரே வீட்டினில் இருந்து கொண்டு அவளை மறக்கமுடியாமல் தவிக்கிறான், நயன்தாரவிருக்கும் ஆர்யாவின் மீது காதல் வந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல அவளின் உணர்வுகள் அவளை தடுகிறது, இதற்கிடையில் முன்பு இருவரும் வெறுத்து வழுந்து கொண்டிருந்த நேரத்தில் நயன்தாரா அவனை விட்டு எங்கேயாவது செல்ல வேண்டுமென எண்ணி அவளின் அலுவலகம் மூலமாக அமெரிக்காவில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள் அங்கு செல்வதற்கான விசாவும் பாஸ்போர்ட்ம் அவனின் வீடிற்கு வருகிறது அதை கொரியர் பாயிடமிருந்து அறிய பெற்றுக்கொண்டு அதை பிரித்து பார்க்கின்றான், பச்போர்டையும் டிக்கெட்டையும் பார்த்த ஆரியா அவள் தன்னை பிடிக்காமல் தான் வெளிநாடு செல்லுகிறாள் என்பதாக நினைத்துகொண்டு அந்த பார்சலை அவளிடம் கொடுக்கிறான் அதை பார்த்து அவள் என்ன செய்வதெரியாமல் யோசிக்கிறாள் இருந்தும் வெளிநாடு செல்ல அவள் முடிவு செய்கிறாள் ஒருபுறம் அவன் தன்னை ஏற்றுக்கொண்டு போகவேண்டாமென்று தடுக்க வேண்டுமென ஏங்குகிறாள் மறுநாள் விமான நிலையத்தில் அவளை இறக்கிவிடுகிறான் அப்போதாவது அவன் தன்னை கூப்பிடுவான் என ஏங்கி நடந்து செல்கிறாள் அவனும் கூப்பிடுகிறான் ஆசையாக திரும்புகிறாள் இவனோ கனத்த இதையதுடம் டாட்டா சொல்லுகிறான், மீண்டும் ஏமாந்து வேகமாக விமானநிலையத்தின் உள்ளே செல்லுகிறாள் இவனும் அங்கிருந்து காரில் வெளியே செல்லுகிறான் அப்பொழுது அவளிடமிருந்து அவனுக்கு கால் வருகிறது சீக்கிரம் உள்ளே வா என்கிறாள் இருவரும் மிகுந்த சந்தோசத்துடன் ஓடி வருகிறார்கள், அங்கே வந்ததும் அவள் அவனிடம் ஏதோ சொல்லுகிறாள் { அந்த காட்சி திரை வடிவமாகிறது } இவள் உள்ளே சென்று பாஸ்போர்ட்டை கவுன்டரில் உள்ள அதிகாரியிடம் கொடுக்கிறாள் அந்த அதிகாரி ஜெய் இவளோ அதிர்ச்சி அடைத்து ஓடி அவனிடம் வருகிறாள் இதை சற்றும் எதிர்பார்க்காத ஆரியா இவளுக்காக ஜெயிடம் பேசுகிறான் அதற்க்கு ஜெய்யோ நான்தான் என் நபனிடம் நான் இறந்துவிட்டதாக சொள்ளசொன்னேன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறான், பிறகு அதை இவளிடம் ஆரியா சொல்லுகிறான் அதற்க்கு இவள் நான் எப்படி சொல்லி உனக்கு புரியவைகிராதுன்னு எனக்கு தெரியல நன் போர்னு சொல்லிவிட்டு புறபடுகிறாள் அப்பொழுது ஆரியா ஐ லவ் யு என்று சொல்லுகிறான் பிறகு இருவரும் கட்டிபிடிது கொல்கிரார்கள் பாடம் முடிகிறது ,
முதலில் கதை விவாதம் :
இந்த படத்தின் கதை, மணிரத்னம் டைரக்ட் செய்து வெற்றிகரமாக ஓடிய மௌனராகம் திரைபடத்தின் தழுவல் என்பதை படம் பார்த்த யாரும் மறுக்கவோ மறக்கவோ கூடாத ஒரு விஷயம் அதில் மூன்று பேர் இரண்டு காதல், இதில் நன்கு பேர் மூன்று காதல், மற்ற அனைத்தும் கிளைமாக்ஸ் உட்பட மற்றம் இல்லை, அப்படி எதாவது வேறு பட்டாள் அது முழுக்க முழுக்க காமடி மட்டுமே சில இடங்களில் மற்றம்,
படத்தின் பிளஸ் :
படத்தில் ஜெய்யின் கதாபத்திரமும் நயன்தாராவின் காதலையும் மிகவும் அருமையாக நகைச்சுவையுடன் கட்சிபடுதிருபது, ஆர்யாவும் சுட்டிப்பெண் நஜிரியாவும் காதலிப்பதும் மிகவும் அருமையாக கட்சிகளாக தொகுக்கபட்டிருபது படத்தின் பலமாக நன் உணருகிறேன், அதை விட முக்கியமாக படத்தின் இரண்டு பாகத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரபட்டிருபது சிறப்பு,
படத்தின் மைனஸ் :
ஜெய் நயன்தாரா, ஆரியா நசிரியா, இந்த இரண்டு காதலும் பிரியும் இடத்தில நமக்கு வருத்தமான உணர்வுகளை அழுத்தமாக பதியவைக்க தவறிவிட்டனர் அதவும் இரண்டு இடத்திலும் உயிர் இழப்பினால் அவர்கள் காதல் பிரிவதைபோல் கதை செல்வதால் \
கண்டிப்பாக அதை நமக்கு மனதளவில் உணர்த்த தவறிவிட்டார்கள், இருந்தாலும் அந்த அழுததை கிளைமசில் பதிய வைக்க முயன்று இருகிறார்கள், இறந்து போனதாக ஜெய் காட்டிவிட்டு கிளைமசில் அவன் உயிரோடு இருபது போன்று காட்டி, அதுவும் நயன்தாராவையும் ஜெய் யையும் ஒருவரை ஓருவரு சந்திபதுபோல் காட்சி படுத்தி அதற்க்கு அழுத்தமான ஒரு காரணம் இல்லாமல் மேலட்டமாக் ஜெய் விளக்கம் கொடுப்பது படத்தின் விமர்சனத்திற்கு வழிவகுக்கிறது,
பாராட்டு :
படத்தின் இயக்குனரை நாம் கண்டிப்பாக பாராட்டவேண்டும், இது அவரின் முதல் படம் என சொன்னால் நம்பாத அளவிருக்கு இதை காட்சி படுதியுருபது பாராட்ட படவேண்டிய ஒரு விஷயம், ஏனென்றால் முதல் படம்மேடுக்கும் இயக்குனர்கள் பொதுவாக ஒரு கிராமத்தை மையமாக வைத்து அதில் காதல் அல்ல நட்பு இவற்றை கட்சிபடுதி மிக குறைந்த செலவில் புதிய அல்லது இளம் நடிகர்களை வைத்தே படம் எடுப்பார்கள், அனால் இவரோ நட்சத்திர நாயகர்கள் நாயகிகள் இவர்களை வைத்து நல்ல செலவில் இப்படத்தை இயகியுருபது மிகவும் சவாலான ஒன்று
ஒளிபதிவாளர் இப்படத்தில் ஒவொவொரு கட்சியிலும் தன்னை நிலை நிறுத்தியிருப்பது முக்கியமாக பாராட்டவேண்டியவர், இவர் புதியவர் என்பதை என்னால் நம்ப முடிய வில்லை, இருந்தாலும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் உண்டு
பாடல்கள் சுமார் பின்னணி இசை சிறப்பு
மொத்தத்தில் அனைவரும் சந்தோசமாக பார்க்கவேண்டிய ஒரு படம்
எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்
விமர்சனகர்தா
எழிலரசன்































